cApStAn Linguistic Quality Assurance

மதிப்பீட்டு மொழிபெயர்ப்பு

கருத்தாய்வு மொழிபெயர்ப்பு

கலாச்சார தழுவல்

மொழியியல் தர உறுதி

95 மொழிகள்

270 வகை மொழி பிரிவுகள்

122 நாடுகள்

670 மில்லியன் வார்த்தைகள் செயலாக்கப்பட்டுள்ளது

நாங்கள் யார்

cApStAn சர்வதேச அல்லது பன்முக பிராந்தியங்களின் திட்டபணிகளின் மொழி கூறுகளை நிர்வகிக்கிறது: மூல உரையை பகுப்பாய்வு செய்தல், சொற்களஞ்சியம் தயாரித்தல் மற்றும் மொழிபெயர்ப்பு குழுக்களைப் பயிற்றுவித்தல் ஆகியவை இதில் அடங்கும் – நோக்கத்திற்கு பொருத்தமான சரிபார்க்கப்பட்ட மொழிபெயர்ப்புகளை வழங்குவதற்காக இவை அனைத்தும் மொழிபெயர்ப்பு தொடங்குவதற்கு முன்பே நடைபெறும்.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எங்கள் மொழி சேவைகளுக்கு ஒப்பிடமுடியாத நற்பெயரை நாங்கள் பெற்றுள்ளோம், மேலும் ஆஸ்திரேலியா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலும் நிரந்தர வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறோம்.

17 பல்வேறு நாடுகளை சேர்ந்த 22 வல்லுநர்களைக் கொண்ட ஒரு பன்முக கலாச்சார மையக் குழு அல்லாமல், cApStAn மொழிபெயர்ப்பு துறையில் உள்ள மிகச் சிறந்த மொழியியலாளர்களுக்கு பயிற்றுவிக்கிறது மேலும் ஒருங்கிணைக்கிறது: அனைவரும் அனுபவம் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் / அல்லது ஆசிரியர்கள்; அனைவரும் பெரும்பாலும் மொழியியல், மொழிபெயர்ப்பு, சமூகவியல், உளவியல், பொருளாதாரம் அல்லது கல்வி அறிவியல் போன்றவற்றில் ஒன்று அல்லது பல உயர் கல்வி பட்டங்கள் கொண்டவர்கள். 700 க்கும் மேற்பட்ட மொழியியலாளர்கள் மற்றும் வல்லுநர்கள் (110 தேசியங்கள் மற்றும் 70 நாடுகளில் இருந்து) தற்போது cApStAn உடன் ஒப்பந்தத்தில் உள்ளனர் மற்றும் தொலைநிலையில் இருந்து வேலை செய்கிறார்கள்.

புருஸல்ஸ் (பெல்ஜியம்) மற்றும் பிலடெல்பியாவில் (யு.எஸ்.ஏ) அலுவலகங்கள் உள்ளன, தற்பொழுது இந்தியாவில் ஒரு ஆலோசகர் உள்ளார்

நாங்கள் என்ன செய்கிறோம்

வழிகாட்டல்

GUIDE

எங்கள் பணி மொழிபெயர்ப்பு செயல்முறைக்கு முன்பே தொடங்கி விடுகிறது.

மிகச்சிறந்த தரமான மொழிபெயர்ப்புக்கு உங்கள் பிராஜக்டின் ஆரம்ப நிலையிலேயே cApStAn மொழி நிபுணரை ஈடுபடுத்துங்கள்.

மொழிபெயர்ப்பு

TRANSLATE

கருத்தாய்வு வினாப்பட்டியலை நீங்கள் எவ்வாறு மொழிபெயர்க்கிறீர்கள்? மதிப்பீட்டை மொழிபெயர்க்க நீங்கள் எவ்வாறு அமைதழுவிக்கொள்கிறீர்கள் ?

மொழிபெயர்க்கப்பட்ட மதிப்பீடு அல்லது கருத்தாய்வு நம்பகமானதாக இருப்பதை cApStAn உறுதிசெய்து ஒப்பிடக்கூடிய தரவை சேகரிக்கும்.
நாங்கள் 100 க்கும் மேற்பட்ட மொழிகளில் தொழில்முறை மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்குகிறோம்.

சான்றளித்தல்

CERTIFY

மே 2000 இல் cApStAn நிறுவப்பட்டபோது, மூன்றாம் தரப்பினரால் தயாரிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகளை சரிபார்த்து உறுதிசெய்யும் சேவையை மட்டுமே உள்ளடக்கியதாக அதன் முக்கிய செயல்பாடு இருந்தது. நிறுவனர்கள் தங்கள் அனுபவத்தை PISA இலிருந்து கொண்டு வந்தனர்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, cApStAn எண்ணற்ற அளவிலான மொழிபெயர்ப்பு தர மதிப்பீட்டு முறைகள் மற்றும் அறிக்கைகளை வழங்குகிறது.

பகிர்வு

SHARE

International Test Commission (ITC) Guidelines for Translating and Adapting Tests வழிகாட்டுதல்களில் விவரிக்கப்பட்டுள்ள நல்ல நடைமுறைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

நாங்கள் நல்ல நடைமுறைகளை பெரிய அளவில் சோதித்து, அவற்றை மேம்படுத்தி, பின்னர் அவற்றை பரப்பி ஊக்குவிக்கின்றோம்.

எந்த துறையில்

அறிவு மற்றும் திறன்கள்

சர்வதேச அளவில் அடிக்கடி கல்வியில், பயிற்சி மற்றும் சான்றிதழ் திட்டங்களில், அறிவு மற்றும் திறன்களை அளவிட வேண்டியுள்ளது.

சமூக மற்றும் அணுகுமுறை கருத்தாய்வுகள்

சமுதாயத்தைப் புரிந்துகொள்வதற்கு நன்கு வடிவமைக்கப்பட்ட கருத்தாய்வுகள் தேவை. சமூக மற்றும் அணுகுமுறை கருத்தாய்வுகள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவு பல பங்குதாரர்களுக்கு விபரமறிந்து எடுக்கும் முடிவுகளை எடுக்க உதவுகிறது.

சந்தை ஆராய்ச்சி

பன்முக பிராந்தியங்களில் மற்றும் பன்முக கலாச்சார சூழல்களில், கருத்தாய்வுகளின் மொழிபெயர்ப்பும் மற்றும் தழுவலும் நுகர்வோரின் அனுபவத்தைப் படம் பிடிக்க குறுக்கு-கலாச்சார பொருத்தத்தில் கவனம் செலுத்துகின்றன.

கருத்துக் கணிப்புகள்

கருத்துக் கணிப்புகள் ஒரு குறிப்பிட்ட மக்களின் எண்ண ஓட்டத்தை அளவிடுகிறது. அவை கணிக்கப்பட்டதாகவோ அல்லது நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொதுமக்களின் எதிர்வினையினை அளவிடவோ செய்கின்றன.

திறன் மேலாண்மை

மதிப்பீடுகள் தொழிலாளர் திறன்களை அளவிடுவதில், வேலைக்கான விண்ணப்பங்களை வடிகட்ட அல்லது உலகளவில் மேலாண்மை செயல்திறனை அளவிடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள்

சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட தகவல்தொடர்பு தேவைகளைக் கொண்டுள்ளன, இதில் கலாச்சார ரீதியாக வேறுபட்ட குழுக்களுக்கு உணர்ச்சி பூர்வமான கருத்துக்களை தெரிவிப்பதும் அடங்கும்.

வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்கள்